தேவையான விபரங்களுடன் தங்களது விண்ணப்பங்களை, சம்மந்தப்பட்ட பகுதிகளுக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில்.
வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்
தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ், படிக்கும் காலத்தில் ஒரு முறை மட்டும், கல்வி உதவித்தொகையாக ரூ.50,000- வழங்கப்படும் உதவித்தொகை பெறுவதற்கு, தொழிற்கல்வி பயிலும் வறிய நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள், தகுதிகளின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வித் தகுதிகள்:
தொழிற்கல்வி (பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை, சட்டம்) பயிலும் வறிய நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஏழை மாணாக்கர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ், படிக்கும் காலத்தில் ஒரு முறை மட்டும் கல்வி உதவித்தொகையாக ரூ.50,000/- வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு முகமையினால் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை நடைபெற்று பயிலும் மாணவர்களிடமிருந்து, இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கட்டணச் சலுகை பெற்ற மாணவர்கள்
இவ்வுதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறாமல், அரசின் முகமையினால் நடத்தப்படும் ஒற்றை சாளர முறை வழியாக சேர்க்கை பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பிடச் சான்று பெற்றவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னதாகவே முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கட்டணச் சலுகை பெற்ற மாணவர்கள், Post Matric கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள், 7.5% சிறப்பு ஒதுக்கீட்டின் வழியாக சேர்ந்து கல்வி உதவித்தொகை பெறும் அரசு பள்ளி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறும் விவசாயிகளின் மகன்கள், மகள்கள், கல்வி உதவித்தொகை பெறும் பணியில் இருக்கும் இராணுவ வீரர்களின் மகன்கள், மகள்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் மகன்கள், மகள்களாக இருப்பவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற இயலாது.
தேவையான ஆவணங்கள்:
எனவே, தகுதியுடைய மாணவர்கள், +2 மதிப்பெண் பட்டியல், குடியிருப்பு சான்று, வருமானச்சான்று, பிறப்பிடச்சான்று, ஒற்றைச் சாளர முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணை நகல், குடும்ப உறுப்பினர்களின் வயது, கல்வித்தகுதி மற்றும் வருமானம் ஆகிய விபரங்களுடன் தங்களது விண்ணப்பங்களை, சம்மந்தப்பட்ட பகுதிகளுக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் கெத்தா மாறும் ஏரியா..? 5 கோடி அப்பு.. என்னென்ன செய்யப்போறாங்க தெரியுமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sellur Raju : மும்மூர்த்தி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.. அமைச்சரை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ !