ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மகளிர் தினத்தில் பெண்களாகிய நீங்கள் சபதம் எடுக்க வேண்டும்
அதிமுக திண்ணைப் பிரச்சாரம்
அ.தி.மு.க., கழக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் செய்வதாக அறிவித்த நிலையில் மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் இன்று மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தி.மு.க., அரசுக்கு எதிரான திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. மேற்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் பெருமான செல்லு கே.ராஜூ தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன் முன்னிலையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. தொடர்ந்து அ.தி.மு.க., திண்ணை பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..,” இந்த சாலையோர கூட்டத்தில் எத்தனையோ நெருக்கடி உள்ள நிலையில் உங்களுக்காகத்தான் இந்த திண்ணை பிரச்சாரம். விடியல் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.
சிறுமிக்கு நீதி கிடைக்க கூடாது என 1.50 கோடி செலவு செய்திருக்கிறார்
இன்றைக்கு சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்கள். பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகிய சிறுமி விவகாரத்தை மீடியாவில் பார்த்த உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும் என நீதிபதி கூறுகையில்., CBI விசாரணை நடத்த கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்லும் வழக்கறிஞருக்கு 1.50 கோடி பணம் கொடுக்கிறது. யார் வீட்டு பணம்.? சிறுமிக்கு நீதி கிடைக்க கூடாது என 1.50 கோடி செலவு செய்திருக்கிறார். அந்த பணத்தில் சிறுமிக்கு ஏதாவது செய்ய வேண்டும். இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் உறுதி ஏற்க வேண்டும்.
இதனால் விமானநிலையம் வரவில்லை
பேசுறது ஒண்ணு செயல் ஒண்ணு இது தான் ஸ்டாலின் ஆட்சி.! சின்னவர்னா யாருப்பா செங்கல் கல்லா.? அது நமக்குப்பா.! சின்னவர் னா உதயநிதிஸ்டாலின் பா.! மதுரையில் உள்ள கீழடி, சமணர் படுகை ஆகியவற்றை பொழுது போக்கு சுற்றுலா தளமாக மதுரையை மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுகிறேன். மதுரையை சுற்றுலா தளமாக அறிவிக்காததால் இன்றைக்கு மதுரை விமான நிலையத்தில் போதுமான பன்னாட்டு விமானங்கள் வருவதில்லை.
அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மாமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் வார்டுகளில் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதும் அதில் அதிகாரிகள் திமுக வட்ட செயலாளர், பகுதி செயலாளர்கள் அமர வைத்து வணிகவரித்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் திமுகவினர் கூறியதை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்.
உள்ளாட்சி சட்ட அமைப்பின் படி தவறு இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும்., இதே நிலை நீடித்தால் சட்டப்படி நீதி மன்றம் செல்வோம் என எச்சரித்தார். அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கைகளை செய்து தர வேண்டும். மக்களுக்கு கொடுத்த அல்வாவை போன்றே பத்திரிகையாளர்களுக்கும் அல்வா கொடுத்த அரசு திமுக அரசு என்றும்., மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் எங்கள் வட்ட செயலாளரை நிற்க வைத்தால் மேற்கு தொகுதியில் வெற்றி பெறுவார்., இது அண்ணா திமுகவின் கோட்டை., இந்த மூர்த்தி என்ன.? மும்மூர்த்தி வந்தால் கூட அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை அரிட்டாபட்டிக்கு அடித்தது ஜாக்பாட்.. அப்படி என்ன செய்யப்போறாங்க அங்க?