முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை! மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்குவார் என தெரிவிப்பு
லண்டனில் இளையராஜா அரங்கேற்றம்
லண்டன் அப்பல்லோ அரங்கில் ஒலித்த 'இசைஞானி' இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை! உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை அரங்கேற்றம்!
ரயில்கள் ரத்து - 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று காலை முதல் மாலை வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நேரத்தில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தகவல். தாம்பரம் - பிராட்வே 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் - பிராட்வே 20 பேருந்துகள், பல்லாவரம் - செங்கல்பட்டு 5 பேருந்துகள் என 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாளை பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்குகிறது. இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்னைகளை எழுப்ப திமுக எம்.பிக்கள் திட்டம்.
துணைகுடியரசு தலைவருக்கு நெஞ்சு வலி
துணைகுடியரசுதலைவட் ஜெகதீப் தங்கருக்கு அதிகாலையிக்ல் ஏற்பட்ட நெஞ்சுவலி மற்றும் அசவுகரியம் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை
காங்கோக்பி மாவட்டத்தில் பேருந்து மீது கல்வீச்சு; போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் ஒருவர் உயிரிழப்பு; 20க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை. ஏறத்தாழ 22 மாதங்களுக்குப்பின் பொது போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் கலவரம்; 7 பேர் கைதான நிலையில் நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் பறிமுதல்
எலிகளின் கூடாரமான மருத்துவமனை
மத்திய பிரதேசம்: மாண்ட்லா மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவில், எலிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு! நோயாளி ஒருவர் படுத்திருந்த படுக்கை அருகே 20க்கும் மேற்பட்ட எலிகள் துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு சக நோயாளிகள் அதிர்ச்சி. 'எலிகளை கட்டுப்படுத்த முடியவில்லை, உங்களை கடிக்கவில்லை என சந்தோஷப்படுங்கள்' என்று மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதில் அளிப்பதாக புகார்
அமைச்சருடன் எலான் மஸ்க் வாக்குவாதம்
அமெரிக்கா: அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சருடன் எலான் மஸ்க் வாக்குவாதம். இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அதிபர் ட்ரம்ப் கடிந்து கொண்டதால் பரபரப்பு! அமைச்சரவை கூட்டத்தில், பணி நீக்கம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவுக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை ட்ரம்ப் வேடிக்கை மட்டும் பார்த்ததாக கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம், 'கூட்டத்தில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை' என ட்ரம்ப் கோபத்துடன் கூறியது விவாதமாகியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஃபைனல்
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போடி, இன்று நடைபெற உள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இதில் வென்று கோப்பையை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் - நடப்பு சாம்பியான RCB வெளியேறியது
நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்றைய லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வியுற்றது. தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோல்வியுற்றதன் விளைவாக, ஆர்சிபி அணி போட்டியிலிருந்தே வெளியேறியுள்ளது.