கரூரில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சி மொழி தின விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


 


 




கரூர் மாவட்டம், தாந்தோணி மலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சி மொழி தின விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். கரூர் மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சி மொழி தின விழாவினை முன்னிட்டு தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தாந்தோணி அரசு கலைக் கல்லூரி முதல் தாந்தோணி கடைவீதி வழியாக சென்று திரும்பவும் அரசு கலைக் கல்லூரியில் வந்து பேரணியானது முடிவடைந்தது.  


 


 




 


பேரணியில் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள் மொழி என்றால் உயிரின் நரம்பு முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு பாவேந்தர் பிறமொழிகளை வாழவைத்து தன்னையும் காத்து நிற்கும் மொழி தமிழ் மொழியே பேரறிஞர் அண்ணா தனிமொழியானதும் தமிழே தாய்மொழியானதும் தமிழே மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியிலுயர்ந்தது தமிழே மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே அறிவிப்புப் பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவோம் உறுதிமொழி அடங்கிய கல்லூரி மாணவிகள் பேரணி நடைபெற்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்கள்.


 




 


முன்னதாக தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவினை தொடர்ந்து தமிழ் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை ஜோதி, அரசு கல்லூரி முதல்வர்  அலெக்ஸாண்டர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.