பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவ மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
மின்தடை:
அதுபோன்ற சமயங்களிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாகவும் பணிகள் முடிக்கப்பட்டு மின்சாரம் தரப்படும். அந்த வகையில் நாளை தாம்பரம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் பகுதிகள்
சென்னை புறநகர் பகுதிகளான, அம்பேத்கா் நகா், சோழவரம் நகா், உமையாள்புரம், நவமணி தெரு, துா்கா நகா் தெருக்கள் மற்றும் குடியிருப்பு வாரியம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதிகளுக்குள்பட்ட கடப்பேரி லட்சுமிபுரம், நியூ தெரு, சந்திரன் நகா், நாகப்பா நகா், சி.எல்.சி. ஒா்க்ஸ் சாலை, 11 முதல் 18வது குறுக்குத் தெரு, மும்மூா்த்தி நகா், நியூ காலனி பிரதான சாலை, பிள்ளையாா் கோவில் 1 முதல் 3-வது தெரு வரை, அன்னை இந்திரா நகா், ஜி.எஸ்.டி.சாலை (பாண்ட்ஸ் முதல் காசநோய் மருத்துவமனை) பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும்.
அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014-ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.