தெலுங்கு மக்கள் குறித்து  சர்ச்சையான கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.





சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்த்தப்பட்ட ஆர்பார்ட்டத்தில் பிராமண சமூகத்திற்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாக கூறி, அதை கண்டிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சியில், அவர் அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள் என நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தெலுங்கர்கள் பற்றிய தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் அதை திரும்ப பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இங்கு, தெலுங்கு பேசுபவர்களாக உள்ளவர்கள், மன்னர்களின் அந்தப்புரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என கூறியதற்கு பலர் தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. 


கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதையடுத்து, கஸ்தூரி அவருடைய கருத்திற்கு உடனே கஸ்தூரி விளக்கம் அலித்தார்.  "தமிழர்களிடையே பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை செய்து மோசடியில் ஈடுபடும் திராவிட புலம்பெயர்ந்த ஏமாளிகளின் இரட்டை நிலைப்பாட்டை நேற்று அம்பலப்படுத்தினேன்.


தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிரானவர் என என்னை பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வதன் மூலம் திமுகவினர் என்னை சீண்ட முயல்கின்றனர். தெலுங்கர்களுக்கு எதிராக நான் பேசியதாக போலியான செய்திகளை அவர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்" என குறிப்பிட்டிருந்தார். அதோடு, அவர் சொன்ன கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 


மன்னிப்பு கோரிய கஸ்தூரி:


இது தொடர்பாக நடிகை கஸ்தூரி மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார், அவருடைய அறிக்கையின் விவரம்:


“ கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மிரட்டல்களையும், தாக்குதல்களையும் சந்தித்து வருகிறேன். அவை என்னுடைய செயல்பாடுகளுக்கு உறுதியை கொடுத்துள்ளது. நான் பெரிதும் மதிக்கும் என்னுடைய தெலுங்கு சகோதரர் ஒருவர் தெலுங்கர்கள் பற்றி நான் தெரிவித்த கருத்தில், நான் பயன்படுத்திய வார்த்தைகள் எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பது பற்றி எனக்கு பொறுமையாக விளக்கினார். 


இந்திய நாட்டில் உள்ள வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நினைத்து பெருமைபடுபவள் நான். பெருமைமிகு தேசியவாதி. மத,சாதிய வேற்றுமைகளை கடந்து வாழ்பவள் நான். தெலுங்கு மொழி, மக்கள் ஆகியவற்றோடு எனக்கு இருக்கும் ப்ரியத்தை நினைத்து மகிழ்ச்சியாக உணர்கிறேன். நாயக்க மன்னர்கள், கட்டபொம்ம நாயக்க, தியாகராஜ கீர்த்தனைகள் ஆகியவற்றின் பெருமைகளை கேட்டு வளர்ந்தவள். என்னுடைய திரைப்பயணத்திலும் தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பை வழங்கியுள்ளர். 


நவம்பர்,3,2024-ம் தேதி அன்று நான் தெரிவித்தது பொதுவான கருத்து அல்ல. குறிப்பிட்ட நபர்களை தாக்கும் நோக்கம் இல்லை. தெலுங்கு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் பேசவில்லை. இதனால் நான் பேசிய சில முக்கிய கருத்துகள் இந்த பிரச்சனையில் மறைந்துவிட்டது. தெலுங்கு மக்கள் குறித்து தெரிவித்த கருத்துகளை நான் திரும்ப பெறுகிறேன். தெலுங்கு மக்களே .. மன்னித்துவிடுங்கள்..” என்று தெரிவித்துள்ளார்.