கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதில், மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக தி.நகர் உள்ளது. குறிப்பாக, மாம்பலம் வடிகால் பகுதியில் அமைந்துள்ள ஜி.என் செட்டி ரோடில் அதிகப்படியான தண்ணீர் தேங்கியிருந்தது சென்னை மாநகராட்சியின் செயல்திட்டப் பணிகளை கேள்விக்குள்ளாக்கியது.
மாம்பலம் கால்வாய்:
சென்னையில் கூவம் , அடையாறு, ஓட்டேரி என 157 கி.நீட்டர் நீளம் நீர்வழிகள் அமைந்துள்ளன. இவை, பெரும்பாலும் வெள்ளை நீரினை வெளியேற்றுவதற்காக மட்டும் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதில், மாம்பலத்தில் தொடங்கி தி.நகர், நந்தனம் வழியாக அடையாற்று ஆற்றில் இணையும் மாம்பல வடிகால் முக்கிய வெள்ள நீர் வடிகாலாக பார்க்கப்படுகிறது.
சீர்மிகு நகரத்திட்ட செயல்பாடுகளின் கீழ்,கடந்த 3 ஆண்டுகளாக தி நகரில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைகளுக்கு பல்வேறு பயனான திட்டங்களுக்காக 200 கோடி செலவழிக்கப்பட்தது. அதில், ஒரு பகுதியாக மாம்பலம் கால்வாயில் 106 கோடி மதிப்பில் 5.6 கி.மீட்டர் நீளத்திகு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நான்கு நாள் பெய்த தொடர்மழையை சமாளிக்க முடியாமல் தி.நகர் தத்தளித்து வருகிறது. இதனையடுத்து, கால்வாய் கட்டுமானப் பணிகளை சென்னை மாநகராட்சி தலைமையிலான பொறியாளர்கள் குழு நேரில் பலமுறை ஆய்வு செய்தது. அதன்பிறகு தான், பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்கள் தெரியவந்துள்ளது.
கால்வாய் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள், கால்வாய் மேல்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க கனரக உபகரணங்களை கொண்டு செல்லவும், தூர்வாரவும் கழிவுநீர் குப்பைகளை கால்வாயில் கொட்டியது தெரியவந்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தி.நகர் வரையிலான 1.7 கி.மீ நீர்வழிகளில் அமுக்கப்பட்ட குப்பைகள் தான் கால்வாய் அடைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, டி.நகர், கோடம்பாக்கம், சைதாபேட்டை, அசோக் நகர்,மேற்கு மாமபலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீரினை வெளியேற்ற முடியாமல் மாம்பல கால்வாய் பயனற்று கிடக்கிறது.
முன்னதாக, மாம்பலம் கால்வாய் கட்டுமானப் பணிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இலக்கினை முடிக்காத ஒரு ஒப்பந்ததாரர் மற்றும் இதுவரை பணியினை தொடங்காத 3 ஒப்பந்ததாரர்களுக்கு காரணம் கேட்டு குறிப்பாணை சென்னை மாநகராட்சி அனுப்பியது. மேலும்,இப்பணியில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்காத காரணத்திற்காக ஒரு ஒப்பந்ததாரருக்கு ரூ. 50,000 ஆயிரம் அபராதமும் விதித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்