தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட சைலேந்திர பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஐபிஎஸ் சைலேந்திர பாபு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுமக்களிடம் காவலர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும். காவலர்களின் குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இலக்குகளை அடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதல்வரிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு இன்னும் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


Mike Tyson Birthday : 50 சாம்பியன்ஷிப்..50 கைதுகள்! - இது மரண அடி ‛மைக் டைசன்’ வரலாறு!


இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சைலேந்திர பாபு வாழ்த்து பெற்றார். அப்போது,  ‘உங்களுக்கான 24 போர் விதிகள்’ என்ற புத்தகத்தை சைலேந்திர பாபு முதலமைச்சரிடம் வழங்கினார். இந்தப் புத்தகம் டிஜிபி சைலேந்திர பாபு எழுதியது குறிப்பிடத்தக்கது.இதேபோல, முன்னாள் டிஜிபி திரிபாதி பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.




முன்னதாக, சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற திரிபாதிக்கு சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில், புதிய டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த விழாவில் பேசிய முன்னாள் டிஜிபி திரிபாதி, “தமிழ்நாட்டை சொந்த மண்ணாக கருதுகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வேன். பொதுமக்கள் நலன் கருதியும், காவல்துறையினருக்காவும் பணி செய்தேன்” என்று பேசினார்.


டிஜிபி கடமையும் பொறுப்பும்:    


இந்தியாவில் காவல்துறையின் தலைமை இயக்குநர் (ஆங்கில மொழி: Director General of Police) இந்தியக் காவல்துறையின் மிக உயரிய பதவியாகும். இப்பதவியில் உள்ளவர்கள் அனைவரும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் ஆவர். இவர்கள் பொதுவாக ஒரு மாநிலத்தில் காவல்துறைக்கு தலைமை வகிப்பர்.  இருப்பினும், டீ.ஜீ.பி அம்மாநில அமைச்சர்களுக்கு  பதிலுரைப்பவராகவே  இருக்க வேண்டும். குடிமக்களின் பாதுகாப்பை, சட்ட ஒழுங்கையும் பாதுகாப்பது மாநிலங்களின் கடமையாகும். உண்மையாகவே, மாநில அரசுகள் தான் இந்த கடமைகளை காவல் துறைக்குக் கொடுத்துள்ளது. மேலும், காவல்துறையினர் நேர்மையாகவும், நியாயமாகவும் செயல்படுகின்றனர் என்பதை மக்களிடம் உறுதிப்படுத்தும் கடமை மாநில அரசுக்கு உண்டு. மேலும், காவல் துறைக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பணம் கொடுக்கப்படுகிறது. 


பொறுப்பு:   


தற்போது மாநிலத்தில் காவல் துறை, டிஜிபி தலைமையின்கீழ் இயங்கி வருகிறது. டிஜிபி தலைமயின் கீழ்,    மாநில காவல்துறை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒரு கண்காண்ப்பாளர் ( Zonal Inspector)தலைமையில் இயங்கி வருகிறது. மேலும், காவல் துறை 11 போலீஸ் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு ஆய்வாளரின் (Inspectors General of Police) கீழ் இயங்கி வருகிறது. 


தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர் , மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் , திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது. தமிழகம் 38 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார். 


தமிழ்நாடு காவல்துறைக்கு தேவையான வருடாந்திர பட்ஜெட்-ஐ, டிஜிபி-யின் அனுமதி பெற்றுதான் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், இது நிதியாமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படும்.


தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார் சைலேந்திரபாபு : டி.ஜி.பி.யின் பொறுப்பும் கடமையும் என்ன தெரியுமா?