நாளையுடன் கத்திரி வெயில் நாளையுடன் முடியவுள்ள நிலையில், மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கத்திரி வெயில் :


கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கத்திரி வெயில் நாளையுடன் முடிவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வெயில் அதிகரிக்கும்:


நாளையுடன் கத்திரி வெயில் நிறைவடையவுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் குறையும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தாலும், சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


10 இடங்களில் சதமடித்த வெயில்:


இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகியுள்ளது. இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 104.60 டிகிரி ஃபாரன்ஹீட்டும் கடலூரில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கத்தில் 102 .38 ஃபாரன்ஹீட்டும், திருச்சியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட்டும் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் புதுச்சேரியில் 100.94 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவாகி உள்ளன.






அக்னியில் மழை:


ஆசானி புயல் மற்றும் வானிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அக்னி நட்சத்திர காலத்தில் சில நாட்களில் பரவலாக மழை பெய்தது. பின்னர் சில நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது மக்களை சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது.


கோடை காலத்தில், அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்


Also Read: Rain Alert: டெல்டா உட்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ; மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண