தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தி.மு.க. அரசு ஓராண்டை நிறைவு செய்தது. இந்த நிலையில், தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி குறித்து அரசியல் கட்சிகளின் மனநிலை குறித்து ஏபிபி- சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
இதில், தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவு பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கீழே காணலாம்.
முதல்வரின் ஓராண்டில் மாநில – மத்திய அரசின் உறவு எப்படி இருக்கிறது..?
நல்ல உறவு :
மத்திய அரசுடனான தி.மு.க. அரசின் உறவு நன்றாக உள்ளது என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 22.9 சதவீதம் நபர்களும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 17 சதவீதம் நபர்களும் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வினர் 26.7 சதவீதம் பேரும், மக்கள் நீதிமய்யத்தினர் 7.7 சதவீதம் பேர் மத்திய அரசுடனான தி.மு.க. அரசின் உறவு நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். நாம் தமிழர் 14.3 சதவீதம் பேரும், மற்றவர்கள் 20 சதவீதமும் என மொத்தம் 20.2 சதவீதம் நபர்கள் தி.மு.க. – பா.ஜ.க. அரசின் உறவு நன்றாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
முழு கருத்துக் கணிப்பு விவரம் :
சுமார் :
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசிற்கும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசிற்கும் இடையே உறவு சுமாராகதான் உள்ளது என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள 32.4 சதவீதமும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 34.9 சதவீதமும் கூறியுள்ளனர். அ.ம.மு.க.வினர் 6.7 சதவீதமும், மக்கள் நீதிமய்யத்தினர் 53.8 சதவீதம் நபர்களும் இதே கருத்தை கூறியுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் 14.3 சதவீதம் பேரும், மற்றவர்கள் 30 சதவீதம் நபர்களும், மொத்தம் 32 சதவீதம் நபர்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.
மோசம் :
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக உள்ளதாக தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 44.7 சதவீதமும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 48.1 சதவீதமும், அ.ம.மு.க.வினர் 66.7 சதவீதமும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்ய கட்சியினர் 38.5 சதவீதம் நபர்களும், நாம் தமிழர் 71.4 சதவீதமும், மற்றவர்கள் 50 சதவீதமும் இதே கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 47.8 சதவீதம் நபர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான உறவு மோசமாக உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்