கரூரில் அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில் காத்திருந்த கர்ப்பிணி தாய்மார்களின் அவதி குறித்த செய்தி தொகுப்பு.


 




 


கரூர் மாநகர பகுதியில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அருகில் ராணி சீதை ஆச்சி கம்யூனிட்டி ஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற இருந்தது. இந்த வளைகாப்பு விழாவுக்காக கரூர் மாநகர் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கர்ப்பிணி தாய்மார்களே அழைத்து வந்துள்ளனர். துறை சார்பில் சுமார் காலை 10:30 மணிக்கு அழைத்து வந்த  கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர். பத்திரிகையாளருக்கு செய்தி சேகரிக்க 12 மணிக்கு வருகை தர சொல்லப்பட்டது,12 மணிக்கு வருகை தந்த பத்திரிகையாளருக்கு  அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்பரஸ் கூரைக்கொண்ட மண்பத்தில் கடுமையான சூடு இருப்பதால் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். போதிய காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை கொண்ட பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் அவதிக்கு உள்ளாகி உள்ள நிலையில் 12:55 -க்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சமுதாய விழாவுக்கு வருகை தந்தார்.


 




மாவட்ட ஆட்சியர் வருகைக்கு  மேயர், துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர் வந்தனர். வேகமாக வந்த மாவட்ட ஆட்சியர் தமிழ் தாய் வாழ்த்து கூட பாடாமல்  நேராக கர்ப்பிணி தாய்மாருக்கு அறிவுரை வழங்கினார். பேச தொடங்கிய மாவட்ட ஆட்சியர் சிறிது நேரத்தில் முகத்தில் வேர்வை அடைய அவர் வைத்திருந்த கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். தொடர்ந்து பேச ஆரம்பித்த நிலையில்  வேர்வை வடிய தொடங்கியது. அவரது நிலைமை மட்டும் புரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த பெண்களுக்கு உடனடியாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார். அந்த ஆஸ்பிராஸ் மேற்கூரை கொண்ட அறையின் சூடு தாங்க முடியாமல் சுமார் 15 நிமிடமே அமர்ந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஏசி காரில் வெளியேறி சென்றார்.


 




 


கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்தனர், அப்போது அவர்கள் அழைத்து வந்த கை குழந்தைகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு நல்ல நேரம் கூட பார்க்காமல் ஒரு மணிக்கு மேல் நடந்த விழா நிகழ்ச்சி, விழாக்காலம் இல்லாத புரட்டாசி மாதம். எத்தனையோ காங்கிரட் கூரைக்கொண்ட மண்டபங்கள் காலியாக உள்ளது. ஆனால் நல்ல மண்டபத்தை ஏற்பாடு செய்யாமல் சாதாரணமாக உள்ள அஸ்பிரஸ் கூரைக்கொண்ட சீட்டில் நடந்த சம்பவம்,அதற்கு ஏற்றார் போல்  கடுமையான வெயிலில் அவதிக்கு உள்ளான கர்ப்பிணி தாய்மார்கள் வேதனை அடைந்தனர்.