குன்றத்தூரில் வீட்டில் வளர்த்து காணாமல் போன வெளிநாட்டு கிளியை கண்டுபிடித்தால், சன்மானம் தருவதாக போஸ்டர் இணையத்தில் வைரல்
ஆப்பிரிகன் நாட்டு கிரே கிளி
நமது வீட்டில் உள்ள ஒருவர் காணாமல் போய்விட்டால் அவரை கண்டுபிடிப்பதற்காக, பல்வேறு வழிகளை கையாளுவோம் அதில் பெரும்பாலும் அவரது படத்தை வைத்து தொலைபேசி எண்களுடன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போஸ்டராக ஒட்டுவது வழக்கம். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தான் மூன்று ஆண்டுகளாக செல்லமாக வளர்த்த ஆப்பிரிகன் நாட்டு கிரே கிளி காணாமல் போனதால் அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் சன்மானம் தரப்படும் என குன்றத்தூர் முழுவதும் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 5000 சன்மானம்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துரை சேர்ந்தவர் மாதேஷ். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆப்பிரிக்கன் நாட்டை சேர்ந்த கிரே கிளியை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வளர்த்து வந்த கிளி திடீரென காணாமல் போனதை கண்டு எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால், இதையடுத்து தான் செல்லமாக வளர்த்த கிளியே இங்கு தேடியும் கிளி கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. அந்த கிளியின் படத்தை வைத்து கிளியை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 5000 சன்மானம் வழங்கப்படும் என குன்றத்தூர் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார் .
இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது
மேலும் தனது குடும்ப உறுப்பினர் போன்று கிளியை வளர்த்து வந்ததாகவும், கிளியை புகைப்படம் எடுத்தால் அதற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என்பதற்காக, தங்களது வீட்டில் வளர்ந்தவரை அந்த கிளியை புகைப்படம் எடுக்கவில்லை என்றும் தங்களுடன் சேர்ந்து ஒரு செல்பி கூட எடுக்கவில்லை என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கிளியை காணவில்லை என குன்றத்தூர் பகுதி முழுவதும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது . காணாமல் போன கிளிக்காக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி காணாமல் போன கிளியை கண்டுபிடித்து, தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்ற போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.