தூத்துக்குடிக்கு வந்த நீர்மூழ்கிக்கப்பல் : தென்னிந்திய கடல்பகுதி பலப்படுத்தப்படுகிறதா?

தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம், துறைமுகம் வந்த நீர்மூழ்கி கப்பல் வருகை என்னும் செயல்பாடுகள், பாதுகாப்பை பலப்படுத்தும் வருகையாகவே பார்க்கப்படுகிறது

Continues below advertisement
வங்காள‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகங்களை சீன நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளன  இந்தியாவின் வட பகுதியான லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதால் அங்கு ஏற்பட்ட பதட்டம் முழுமையாக நீங்கவில்லை இரு நாட்டு பிரதிநிதிகள் இடையே பேச்சு வார்த்தை பலமுறை நடந்தபோதிலும் அங்கு முழு அமைதி ஏற்படவில்லை. இந்த நிலையில் தென்பகுதியான தமிழக கடலோரம் இலங்கை பகுதியில் சீனா கப்பற்படையை வலிமைப்படுத்தி வருகிறது.  இது சீனா-இந்தியா போர் பதற்றத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 
                            
புதிதாக குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் என மிக முக்கிய நிறுவனங்கள் இங்குள்ளது. இதையொட்டி, இந்திய தரப்பிலும் ராணுவ வலிமையை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாட்டின் அனைத்து எல்லைகளிலும் பீரங்கிகள், அதிநவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ராணுவ தளவாடங்களை எளிதாக கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
 
தேவை ஏற்பட்டால் போர் விமானங்கள் இந்த சாலைகளில் இறங்கும் வண்ணம் சாலைகள் அமைக்கப்படுகிறது  அதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒருபகுதியாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி கப்பல் "சிந்துஷாஸ்ட்ரா" தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ்.கட்டபொம்மன்  கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் அடிப்படை தேவையான தண்ணீர் நிரப்புவதற்காகவும் நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி கப்பல்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நடுக்கடலில் போர் ஒத்திகைக்காகவும் இந்த "சிந்துஷாஸ்ட்ரா" நீர்மூழ்கி கப்பல் வந்து இருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது   கப்பல் இன்னும் ஒரு வார காலம் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் நீர்மூழ்கி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்திய கடற்படை சார்பில் அதிகார பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, ஏற்கனவே இலங்கையில் சீனா கால்பதித்து உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு கருதி கிழக்கு கடற்கரை சாலை பகுதி விரிவாக்கப்பட உள்ளது. மேலும் தூத்துக்குடி பகுதியில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம், துறைமுகம் வந்த நீர்மூழ்கி கப்பல் வருகை என பாதுகாப்பை பலப்படுத்தும் வருகையாகவே பார்க்கப்படுகிறது
 
இந்த கப்பல் 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் 72.6 மீட்டர் நீளமும், 9.9 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு மேல் பகுதியில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்திலும், தண்ணீருக்கு அடியில் மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லக்கூடியது. இந்த கப்பலில் 13 கடற்படை அதிகாரிகள் உள்பட 52 வீரர்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் ஆகும். இந்த நீர்மூழ்கி கப்பலில் வானில் இருந்து வரக்கூடிய ஏவுகனைகளை தடுத்தல், கடலில் மேற்பரப்பில் உள்ள கப்பல்களை தாக்கி அழித்தல், கடலுக்கு அடியில் வரக்கூடிய நீர்மூழ்கி கப்பல்களை அழித்தல் ஆகியவற்றுக்கான அதிநவீன ஏவுகனைகள் பொருத்தப்பட்டு உள்ளன.
Continues below advertisement
Sponsored Links by Taboola