தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவமனைகள் எதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனது.
மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவமனைகள் எதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவமனைகள் எதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்; ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரு நோயாளி கூட உயிரிழக்கவில்லை என்பது தான் பெருமிதம் அளிக்கும் நிலையாக இருக்கும்!(2/3)<a >#Oxygen</a></p>— Dr S RAMADOSS (@drramadoss) <a >May 10, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சென்னையில் உள்ள சில புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவை உண்மையாக இருக்கக்கூடாது என்று நம்புவோம். தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவமனைகள் எதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்; ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரு நோயாளி கூட உயிரிழக்கவில்லை என்பது தான் பெருமிதம் அளிக்கும் நிலையாக இருக்கும். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அறிவித்துள்ள தினசரி ஒதுக்கீடான 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இப்போதிலிருந்தே பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.