இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவரும் பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவால் சில நாட்களாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

My heartfelt condolences to @vp_offl @Premgiamaren for the passing away of their mother who was a kind hearted and very special person to everyone around her 💔.

I am praying for the family to face the days ahead and for aunty’s soul to rest in peace 🙏🏻. pic.twitter.com/vttRWKSuQ8
— Ramya Subramanian (@actorramya) May 10, 2021

இந்நிலையில், மணிமேகலை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. தனது தாயாரின் இழப்பு அவரின் மகன்களான இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி ஆகியோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மணிமேகலையின் மறைவுக்கு நடிகை ரம்யா உள்பட திரையுலகினர் பலர் இரங்கல் கூறி வருகின்றனர்.