25 ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்றி ,  கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலன் இல்லாமல் செவிலியர் உயிரிழந்துள்ளார்.



 




 வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட வள்ளலார் பகுதி ஒன்று (பேஸ் - ஒன்று ) ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்  பிரேமா(52).  அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்பார்வை செவிலியராக பணியாற்றி வருகிறார் 




இவர் கடந்த 25 ஆண்டுகளாக இங்கு தான் பணி செய்து வந்துள்ளார்இவரது கணவர் முரளி ஆசிரியராக இருந்து கடந்த ஆண்டுகளுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்இதையடுத்து செவிலியர் பிரேமாகௌதம்நிரஞ்சன் என்ற இரு மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார் 




 பணியில் எப்போது முழு அக்கறையுடன் பணியாற்றுபவர் என்கிற பெயர் பிரேமாவுக்கு உண்டு. எதையும் அப்பணிப்போடு செய்பவர். கொரோனா பெருந்தோற்று காலத்திலும் தொடர்ந்து மருத்துவப்பணியில் ஈடுபட்டு வந்த அவருக்கு, திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுகடந்த மாதம் 26-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பணியாற்றி வந்த அடுக்கம்பாறையில் உள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு நோய் தொற்று அதிகரித்தது.  இதனால் நாளடைவில் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. 




 மேலும் தொற்று தீவிரமானதால் கடந்த சில தினங்களாக வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார் செவிலியர் பிரேமா. தீவிர மருத்துவ போராட்டம் பலனளிக்காத நிலையில் நேற்று காலை சிகிச்சை பலன் இன்றி பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார்.  






 25 ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்றி வந்து கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலன் இல்லாமல் செவிலியர் உயிரிழந்தது சக பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியாற்றும் இடத்தில் இந்த சோகம் என்றால், செவிலியர் பிரேமாவின் குடும்பத்தின் சோகம் இன்னும் கொடுமையானது. தந்தையை இழந்த நிலையில் தாய் பிரமோ உடன் வசித்து வந்த அவரது மகன்கள் கெளதம் மற்றும் நிரஞ்சன் ஆகியோர் தற்போது தாய், தந்தையின்றி ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


ஒரு குடும்பத்தின் இரு தூண்கள் இல்லாத நிலையில் இனி யார் ஆதரவில் இருக்கப்போகிறோம் என்கிற கவலையில் அந்த இருவரும் நொந்து போயுள்ளனர். உலகமே நேற்று உலக அன்னையர் தினம் கொண்டாடியுள்ளது. பலரும் தன் தாயுடன் அதை கொண்டாடியுள்ளனர். இந்த சகோதரர்களோ, தங்களுக்கென இருந்த தாயை இழந்து அன்னை தினத்தை என்றும் மறக்க முடியாத தினமாக சந்தித்துள்ளனர். மருத்துவ சேவையில் தன் உயர் நீத்த பிரேமாவின் தியாகத்தை போற்றவும், நிற்கதியாய் நிற்கும் மகன்களின் நலன் காக்கவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.