அண்ணல் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Continues below advertisement


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறோம்” என்றார். மேலும், இந்திய நாட்டின் அரசியலமைப்பு வடிவமைக்க காரணமாக இருந்தவர்.




 


அதேபோல் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவதற்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒரு மாபெரும் தலைவர் என்று கூறிய அவர், அவருடைய வழி நின்று தொடர்ந்து திமுக தன்னுடைய கடமையை நிச்சயமாக நிறைவேற்றும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.