Karaikal fishermen: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - நடுக்கடலில் அசம்பாவிதம்

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

Continues below advertisement

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது சில சமயங்களில் நடைபெறுகிறது. மேலும் சில சமயங்களில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களும், படகுகளை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

Continues below advertisement

கடல் கொள்ளையர்கள்:

இந்நிலையில், இன்று புதுச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் மீனவர்கள், கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, 4 படகுகளில் திடீரென வந்த இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள், காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களின் வலைகளையும் பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

கரை திரும்பிய மீனவர்கள் 7 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எல்லை தாண்டி இலங்கை மீனவர்கள்:

இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola