தூளிப்பட்டியில் நடந்த முகாமில் 150 கால்நடைகளுக்கு சிகிச்சை.


 





கடவூர் அருகே பாலவிடுதி ஊராட்சி தூளிப்பட்டியில் நடந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய பகுதிகளில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் படி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவை அடுத்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடவூர் அருகே பாலவிடுதி ஊராட்சி தூளிப்பட்டியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. துணை வேளாண் அலுவலர் நாகராஜன், உதவி வேளாண் அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடை மருத்துவர் பிரேம்குமார் கலந்துகொண்டு கால்நடைகளுக்கான குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல்  செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சை அளித்தார்.





 


இதேபோல், தாது உப்பு கலவை வழங்கி செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளுக்கு மழைக்காலங்களில் நோய் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகள் வழங்கினர். இதே போல் கால்நடைகள் குறித்து சிறு கண்காட்சி அமைக்கப்பட்டு கால்நடை வளர்க்கும் முறைகள் குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆலோசனைகளை அளித்தார். மேலும் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அளித்து வரும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். 


 




 


இந்த முகாமில் கருவுட்டாளர் கிருஷ்ணகுமார், உதவியாளர் சரவணன் உள்பட கால்நடை துறையினர், வேளாண்மை துறையினர், தோட்டக்கலை துறையினர், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


குளித்தலை அருகே உழவர் சிறப்பு முகாம்.


குளித்தலை அருகே  ஏழு நூற்று மங்கலத்தில் உழவர் சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமுக்கு பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் சிவானந்தம் பேசியதாவது.


 குளித்தலை வட்டாரத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறையில் தொடர்பு உடைய துறைகளான வருவாய், உள்ளாட்சி, கால்நடை, கூட்டுறவு பால்வளம், பட்டு வளர்ச்சி துறை, மீன்வளத்துறை, போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம் முகாமில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொழில்நுட்ப ஆலோசனைகள், விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன. என்று அவர் பேசினார். தொடர்ந்து துறை சார்ந்த அலுவலர்கள் தங்களது திட்டம் குறித்து பேசினார். முகாமில், மணத்தட்டை வேளாண்மை துணை இயக்குனர் மணிமேகலை, தோட்டக்கலை உதவி இயக்குனர் லலிதா, உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், யூனியன் கமிஷனர் நீலகண்டன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.