மதுரை மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவான மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை,  கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் போன்ற 15 நாட்கள் தொடர் திருவிழாவாக நடைபெறும்.

 





இந்நிலையில் மதுரை மாவட்டம் அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் மற்றும்  ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக கள்ளழகர் கோயில் நிர்வாகம் சார்பில் செய்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



 

அதில் கள்ளழகர் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக வரும் 26 ஆம் தேதி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் காலை 8.15 மணி முதல் 9.00 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும் பிற்பகல் 3:15 மணிக்கு மேல் 4.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வரும் மே மாதம் 5 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'நாம் யாருடைய வாரிசு - நடிகர் விஜயின் வாரிசு என