தீராத வயிற்று வலியால் அவதி டீ மாஸ்டர் தூக்கு போட்டு தற்கொலை


தோகைமலை அருகே உள்ள வடசேரி பண்டார தெருவை சேர்ந்தவர் ராமு. இவர் ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார் .தீராத வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த சோமு அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வலி தீரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வடசேரி பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 




 


சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி


உப்பிடமங்கலம் வடக்கு கேட் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். இரவு இவர் தனது வீட்டிலிருந்து கடைவீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பேரூராட்சி அலுவலகம் அருகே எதிர் திசையில் வந்த சரக்குவேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நந்தகுமாரை அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நந்தகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளையனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




 


சகோதரர்கள் மீது தாக்குதல் மூன்று பேர் கைது.


குளித்தலை அருகே சோப்லாப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் மகள் சத்யாவை திருமணம் செய்து கொண்டார். தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சத்யா, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், சத்யாவை அழைத்து செல்லுமாறு அவரது அண்ணன் சக்திவேல் ,செந்தில்குமாரின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து, செந்தில்குமார், அவரது தந்தை மணி, பெரியப்பா பாலகிருஷ்ணன் ஆகியோர் சத்யா வீட்டுக்கு சென்றனர். அப்போது, சக்திவேல், முருகானந்தம், உறவினர் சண்முகம் ஆகியோர் செந்தில்குமாரை கடப்பாரையாளும் முருகானந்தம் கட்டையாலும் தாக்கினார்.


 




தகவல் அறிந்த செந்தில்குமாரின் தம்பி மகேந்திரன் அங்கு சென்ற போது அவரையும் ஈட்டி, கடப்பாரையால் தாக்கி விட்டு, சக்திவேல் உள்ளிட்ட மூவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். செந்தில்குமாரும் மகேந்திரனும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் படி சக்தி வேல், முருகானந்தம், சண்முகம் ஆகிய மூவர் மீதும் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.