உலக பிரசித்திப் பெற்ற திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா ஆலயம் எனப்படும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம், பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்த ஆலயத்தில் இதுவரை 15 முறை தங்க தேரோட்டம் நடந்துள்ளது. கடந்த 2-2-1806ம் ஆண்டு பனிமய மாதாவின் அற்புத சொரூபம் தூத்துக்குடி வந்தடைந்ததின் 250வது ஆண்டு நிறைவாக முதல் முறையாக தங்க தேரோட்டம் நடந்தது. கடந்த 2013ம் ஆண்டு 15வது தங்க தேரோட்டம் நடைபெற்றது. 


பனிமய மாதாவின் தேர்ச் சிறப்புகள் நிறைந்தது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளதாக உருவாக்கப்பட்டு உள்ளது.


தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மறைமாவட்டம் துவங்கியதன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்தாண்டு திருவிழாவில் பனிமய அன்னையின் தங்க தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி தங்க தேரோட்டத்திற்கான அனைத்து பணிகளும் ஆலய வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் தங்க தேர் அமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது. இந்தாண்டு திருவிழா வரும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


சிறப்பு ரயில்கள்: 


ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூயபனிமயமாதாவின் தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. 10 ஆண்டுகள் கழித்து நடைபெறும் தேரோட்டத்தை காண ஏராளமான மக்கள் திரளாக வருவார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தாண்டு நடைபெறும் தேரோட்டத்தை காண ஆர்வமாக உள்ளனர். இந்த விழாவின் போது சொந்த ஊருக்கு செல்ல மக்கள் படையெடுப்பார்கள். மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கல் இயக்கப்பட வேண்டும் என தூதுக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெற்கு ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து ஆக்ஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதி சென்னை  மற்றும் தூத்துகுடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த சிறப்பு ரயில் (எண் 06005) 03.08.2023 அன்று சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இதுபோல் ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று சிறப்பு ரயில் (06006) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு சென்னை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


Tamilnadu Fishermen: தமிழகமே அதிர்ச்சி..! ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்


Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 174 கன அடியில் இருந்து 104 கன‌ அடியாக குறைவு..