கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ”கோவையில் டி.ஐ.ஜி விஜயகுமாரின் மரணம் எனக்கு வருத்தத்தை தருகிறது. அவர் அந்த முடிவை எடுத்திருக்க கூடாது. அவருக்கு எதன் அடிப்படையில் மன அழுத்தம் வந்ததை நாம் பார்க்க வேண்டும். காவலர்களுக்கு ஒரு சங்கம் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதேபோல் அரசியல் அழுத்தமும் காவல் துறைக்கு அதிகம் உள்ளது. அவர்களை சுதந்திரமாக செயல்படாமல் விடுவதே ஒரு மன அழுத்தம் தான். தற்கொலைக்கு ஒரு தூண்டல் இருக்கும். அது என்னவென்று விசாரிக்க வேண்டும்.


இதே மனநிலையில் பல காவல்துறை அதிகாரிகள் இருக்கலாம். குறிப்பாக நானே இரண்டு மாநில பிரச்சனையும் அழுத்தம் இல்லாமல் கடந்து போகிறேன். ஆளுநரை போஸ்டர் ஒட்டி கண்டிக்கக்கூடிய போஸ்ட்டிங் கிடையாது. ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது? ஆளுநர்கள் அரசியல் பேசலாம். அரசியல் இல்லாமல் எதுவும் கிடையாது. அரசியல் தலைவர்கள் அரசியல் பேசும் போது, ஆட்சித் தலைவர்களும் அரசியல் பேசலாம். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை பேசினால் அது அவருடைய கருத்து. நீங்க சொன்னதை தான் ஆளுநர் பேச வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல் என்னை எதிலும் அடைக்க முடியாது.


எனக்கும் புதுச்சேரி முதல்வருக்கும் அண்ணன் தங்கை உறவு உள்ளது. புதுவையில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை எதிர்கட்சிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் தொடர் விமர்சனம் செய்கிறது. புதுவை புதுமையாக போய்க் கொண்டிருக்கிறது”  எனத் தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண