எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஓபிஎஸ் தரப்பு மனுக்களை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இன்று அதிமுக கொறடா சபாநாயகரை சந்தித்துள்ளார். 


சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை நியமித்துள்ளனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக இன்று காலை அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


எதிர்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.


கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாலர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முடிவை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று ஓ.பி.எஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தனர்.


இந்த தீர்ப்பு வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல் ஓ.பி.எஸ் தரப்பில் இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது. இந்த தீர்ப்பை குறித்து ஓபிஎஸ் உடன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட வைத்தியலிங்கம் கூறுகையில், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு இறுதியான  தீர்ப்பாக இருக்காது, எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இது தற்காலிகமானது தான் என குறிப்பிட்டார்.


எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கட்சி அவர் வசம் வந்துள்ளது. நேற்று பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி இன்று காலை சபாநாயகரை சந்தித்து எதிர்கட்சி தலைவர் மற்றும் அவரது இருக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துயுள்ளனர். சட்டப்பேரவையில் இப்போது இபிஎஸ் அருகில் உள்ள இருக்கையில் தான் ஓபிஎஸ் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவில் குவிந்த கமாண்டோ படை வீரர்களால் பரபரப்பு


பல்லை பிடுங்கிய ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பணி இடைநீக்கம் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு


Sudha Kongara: சூரரைப் போற்றி தேசிய விருது வென்ற சுதா கொங்கரா..முத்திரை பதித்த இயக்குனருக்கு பிறந்தநாள் இன்று!