நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிகளவில் மழைப் பொழிவை கொடுக்கும் பருவமழையாக தென்மேற்கு பருவமழை உள்ளது. இந்த நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று வரும் ஜூன் 1-ஆம் தேதி ( நாளை மறுநாள்) வலுப்பெற்றுள்ள வரும் 3-ஆம் தேதி மழைபெய்யத் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. இந்த பருவமழையால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதிக மழைபெய்யக்கூடும் என தெரிகிறது.


கேரளாவில் தொடங்கும் இந்த மழையால் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அதிகளவிலான மழைப்பொழிவு பொழிய உள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இந்திய வானிலை ஆய்வுத்துறையின் இந்த தகவலால், கேரள மாநில அரசு தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி உள்ளது. 


https://tamil.abplive.com/news/india/tamils-can-become-mlas-in-kerala-but-not-ministers-micro-politics-of-kerala-4445/amp


டவ் தே புயல், யாஷ் புயலால் ஏற்கனவே பெரியளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் தென்மேற்கு பருவமழையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.