பிக்பாஸ் வீட்டில் 98 நாட்கள் தாக்குப்பிடித்து வெளியேறிய தாமரையின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


விஜய் டீவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் நாடக கலைஞர் தாமரைச் செல்வி. சென்ற வாரம் 6 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தாமரை வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.




தாமரைக்கு ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் ஆகும், அவர் பிக்பாஸ் வீட்டில் 14 வாரங்கள் இருந்து உள்ளார். அதனால் மொத்தம் 980000 ரூபாய் சம்பளம் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.


ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் இறுதி நாட்கள் நெருங்கும் சமயத்தில், பணப்பெட்டி எடுத்து செல்வதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படும். அது போன்று இந்த சீசனிலும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பைசக போட்டியாளார் சிபி எடுத்துக் கொண்டார். தற்போது அந்த வாய்ப்பை தாமரை பயன்படுத்தி இருந்தால் கூட 12 லட்சம் ரூபாயை எடுத்திருக்கலாம். இதன் மூலம் தாமரை அதிக தொகையை சம்பாதித்து இருக்க முடியும், ஆனால் அதையும் எடுக்காமல் விட்டு விட்டார் என சமூக வலைதளத்தில் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


பிக்பாஸ் சீசன் 3 மற்றும் 4. இரண்டு சீசன்களிலும் பணப்பெட்டியில் 5 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்ட போதே, இறுதி கட்டத்தில் இருந்த போட்டியாளர்கள் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள். ஆனால், தற்போது 12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.




தாமரை பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, எனக்கு இந்த 12 லட்சம் ரூபாய் பணம் வேண்டாம். நான் வெளியில் சென்றால் என்னால் இதை விட அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தில் 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இறுதி சுற்றில் நிரூப், பிரியங்கா, அமீர், ராஜு, பாவ்னி ஆகியோர் இருக்கின்றனர். அவர்களில் யார் வெற்றி பெறுவார் என இந்த வார இறுதியில் தெரிய வரும்.


இந்த போட்டிக்கான புரோமோ  வெளி வந்தது, அதில் பிக்பாஸ் 5 -வது சீசனின் பழைய போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் வருகிறார்கள். அவர்களை கண்ட மீதமுள்ளா போட்டியாளர்கள் 5 பேரும் கொண்டாட்டம் அடைகிறார்கள்.