2011 முதல் 2021 வரை 65,000 வழக்குகள் பதிவான நிலையில், 2 மாதத்தில் 25,000 வழக்குகளில்  இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு தென் மண்டல ஐஜி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. 


ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர், தன் மீது நிலை அறிக்கை தாக்கல் செய்யாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இனி வரும் காலங்களில் தேதி குறிப்பிட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. 


இதையடுத்து தென் மண்டல் காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். 2 மாதங்களில் 25,000 வழக்குகளில்  இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு, தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், தென் மண்டல் காவல்துறை துணை தலைவர், தென் மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு நீதிமன்றம் பாரட்டு தெரிவித்துள்ளது.