தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், விளம்பரத்திற்காகவும் அறப்போர் இயக்கம் ஊழல் புகார் கூறுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


வழக்கு:


நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு இருப்பதாக கூறிய, அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு எதிராக ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு அளித்துள்ளார். இம்மனுவில், எதனடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.


நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு என அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு எதிராக ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கோரி இ பி எஸ் மனு அளித்துள்ளார். மேலும் எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு  எனவும் இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Also Read: கடவூர் அருகே பாப்பனம்பட்டியில் தேமுதிக கடவூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கதிர்வேல் இல்ல காதணி விழாவில் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்.



வழக்கு ஒத்திவைப்பு:


அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளன. சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நபர் குறித்து அவதூறு கருத்துகளை கூறிவிட்டு அதற்கு இழப்பீடு கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என இ பி எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கை செபடம்பர் 1ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Watch Video: அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது