முதல்வரின் கொரோனா நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழிழ்நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 10 லட்சம் ரூபாய் மேல் வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும், ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக நிதியை செலுத்தலாம் என்றும் கூறினார். மேலும், நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறினார். இதனைத் தொடர்ந்து பலரும் முதலைமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். நடிகர் சூர்யா குடும்பத்தினர், நடிகர் அஜித் குமார், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கொரோனா நிதி அளித்துள்ளனர்.

#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்!

பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும். pic.twitter.com/1fsk1bOYqg
— M.K.Stalin (@mkstalin) May 11, 2021

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி வழங்கினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது, கொரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் கொரோனா நிவாரண நிதியாக ஒரூ கோடி ரூபாய் கொடுத்தனர்.

சமீபத்தில், ஹைதராபாத்தில்  நடைபெற்ற ‘அண்ணத்த’ படத்தின் ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.