பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தப்படும் என்றும் அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ''பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தப்படும். அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.


ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையைப் பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம்.


பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் முழுமையாகக் கண்காணிக்கப்படும். 


 






பேருந்து பணிமனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் அதிகளவில் பணிக்கு வராமல் இருப்பதால்தான் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனைச் சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்விற்குப் பின் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.


இந்த ஆண்டு இறுதிக்குள் பேருந்தில் பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், gpay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்'' என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதில் பள்ளிக்குச் செல்ல இலவசப் பேருந்து அட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண