TN Weather Update : சென்னையில் அதிகபட்சமாக இரண்டாவது நாளாக 105.44 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக இரண்டாவது நாளாக அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
16 இடங்களில்
சென்னை நுங்கம்பாக்கம் 105.44° பாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கம் 105.44° பாரன்ஹீட், கடலூர் 102.92° பாரன்ஹீட், ஈரோடு 103.64° பாரன்ஹீட், கரூர் பரமத்தி 104.9° பாரன்ஹீட், மதுரை நகரம் 102.2° பாரன்ஹீட், மதுரை விமான நிலையம் 103.28° பாரன்ஹீட், நாகப்பட்டினம் 100.04° பாரன்ஹீட், பரங்கிப்பேட்டை 104.36° பாரன்ஹீட், நாமக்கல் 100.4° பாரன்ஹீட், பாளையங்கோட்டை 102.2° பாரன்ஹீட், சேலம் 102.02° பாரன்ஹீட், தஞ்சாவூர் 102.2° பாரன்ஹீட், திருச்சிராப்பள்ளி 103.1° பாரன்ஹீட், திருத்தணி105.8° பாரன்ஹீட், வேலூர் 108.14° பாரன்ஹீட் வெயில் இன்று பதிவாகியுள்ளது.
மொத்தம் தமிழ்நாட்டில் 16 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ள நிலையில், புதுச்சேரியில் 102 டிகிரி ஃபாரன்டிட் வெயில் பதிவாகியுள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை தொட்டு கோர தாண்டவம் ஆடுவது போல் அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி ஃபாரன்டிட் வெயில் பதிவாகியுள்ளது இதுவே இந்த ஆண்டின் அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகும். அதேபோல் இன்னும் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :
16.05.2023 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க