கள்ளச்சாரயம் குடித்து 11 உயிரிழந்தோர் விவகாரம் தொடர்பாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


செங்கல்பட்டு, விழுப்புரம் மதுவிலகக்கு டி.எஸ்.பி. பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாரயம் குடித்து இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அரசு அதிகாரிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம் அருகே மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழ்ந்துள்ளனர். கடற்கரையோர பகுதியான வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை நடந்துள்ளது. 


இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இதுவரை 202 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 203 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 121 பேர் சொந்த பிணையில் விடிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இதுவரை 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 203 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 121 பேர் சொந்த பிணையில் விடிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


விழுப்புரம் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழப்பு விவகாரத்தில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




TN 10th 11th Results 2023: 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவு எப்போது?- அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு