School Colleges Leave: இமானுவேல் சேகரனின் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


விடுமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆஷா  வெளியிட்ட அறிவிப்பில், ”இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.09.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள் மற்றும் ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நாளுக்கு பதிலாக வரும் 23-ஆம் தேதி அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்றும், இமானுவேல் சேகரனின் நினைவு தின நிகழ்வில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பார்வையாளர்களின் நலன் கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிப்பதகாவும், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம் வரும் 11-ம் தேதி இயங்காது என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அனுசரிக்கப்படுவதை ஒட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவோருக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டார். அதில், இமானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோரின் வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படாது, சொந்த வாகனங்களில் வருவோர் முன்னதாக காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்து அனுமதி பெற வேண்டும், வாகனத்தில் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது, வாகனங்களில் சாத, மத உணர்வை தூண்டும் வாசகங்கள் மற்றும் பதாகைகள் இடம்பெற்றிருக்க கூடாது, சாதி பெயருக்கான முழக்கங்கள் எழுப்ப கூடாது, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பு தலைவர்களுக்கு 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் இமானுவேல் சேகரின் நினைவு நாள் முன்னெச்சரிக்கையாக அருகில் இருக்கும் சிவகங்கை மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Jailer Success: வசூல் வேட்டையில் ஜெயிலர்.. 100 ஏழை குழந்தைகளுக்கான சர்ஜரிக்கு காசோலை வழங்கிய சன் பிக்சர்ஸ்


OTT Release: இந்த வாரம் ஓடிடியில் இவைதான்.. ஜெயிலர் முதல் குங் ஃபூ பாண்டா வரை டாப் ஹிட்ஸ் படங்கள்!