தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் இன்று பத்திரப்பதிவ, வணிகவரி மற்றும் கைத்தறித்துறைகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன்படி, காலை 10 மணிக்கு பேரவையில் விவாதம் தொடங்கியது.
சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிய சித்தா மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
2021-22 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை தனியாக அமைப்பதற்கு ரூ.2 கோடி முதலில் ஒதுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிய சித்தா மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதை சுகாரத்துறை அமைச்சர் உறுதி செய்திருக்கிறார்.
முன்னதாக, இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல், டீசல் விலை குறித்து பிரதமர் மோடியின் புகாருக்கு விளக்கம் அளித்தார். அதில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பிரதமர் பேசி உள்ளார்” என தெரிவித்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற கொரோனா தொடர்பான மாநில அரசு கூட்டத்தில் வாட் வரி குறித்து பேசிய பிரதமர் மோடி, வாட் வரியை குறைக்காததுதான் பெட்ரோல் விலை அதிகரிக்க காரணம். மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல் மாநில அரசுகள் மக்களுக்கு கூடுதல் சுமை அளிக்கிறது என பேசினார். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு குறைத்த நிலையில் தமிழ்நாடு, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை வரியை குறைக்காததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்