சதாப்தி எக்ஸ்பிரஸ் ( பெங்களுர் - சென்னை ) ரயில் ஆவடியில் என்ஜின் கோளாறு காரணத்தினால் நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். உடனடியாக மாற்று ஏற்பாடாக சதாப்தி ரயிலில் இருந்த பயணிகளை மாற்று வண்டியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேறொரு பயணிகள் ரயிலில் அனைத்து பயணிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
Shatabdi Express: பாதி வழியில் திடீரென நின்ற சதாப்தி எக்ஸ்பிரஸ்.. அவதியில் பயணிகள்.. காரணமும் மாற்று ஏற்பாடும்!
ஆர்த்தி | 19 Jun 2023 12:15 PM (IST)
சதாப்தி எக்ஸ்பிரஸ் ( பெங்களுர் - சென்னை ) ரயில் ஆவடியில் என்ஜின் கோளாறு காரணத்தினால் நடு வழியில் நின்றது.
சதாப்தி எக்ஸ்பிரஸ் (கோப்பு புகைப்படம்)