தென் சென்னை பகுதிகளில் 150 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 137 மில்லி மீட்டர் மழையும் தரமணியில் 117 மில்லிமீட்டர் ,செம்பரம்பாக்கத்தில் 109 மில்லி மீட்டர் மழையும், கொரட்டூரில் 84 மில்லிமீட்டர் மழையும், பூந்தமல்லியில் 74 மில்லி மீட்டர் ,நுங்கம்பாக்கத்தில் 67 மில்லி மீட்டர் மழையும், மேற்கு தாம்பரத்தில் 62 மில்லி மீட்டர் மழையும், திருவள்ளூரில் சராசரியாக 50 மில்லி மீட்டர் மழையும், காஞ்சிபுரத்தில் 79 மில்லி மீட்டர் மழையும்,பதிவாகியுள்ளது. இது மட்டுமில்லாமல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்தில் 68 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம்ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3645 மி கன அடியில், தற்போது 2403 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 1146 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியிலிருந்து 174 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3300 மி கன அடியில் தற்போது 2178 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து 258 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு, ஆன 1081 மி.கன அடியில் 428 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு நீர் வரத்து 12 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மி கனடியில் தற்போது 1257 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 330 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் முழு கொள்ளளவான 500 மி கன அடியில் தற்போது 425 மில்லியன் கன அடியாக உள்ளது.