TN Weather Update: கொளுத்திய சூரியன்.. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை..
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா புயலின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் மே 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் கிழக்கு திசை காற்று மாறுபாடு மற்றும் மோக்கா புயல் காரணமாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன் தினம் (12.05.2023), தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர “மோகா” புயலானது நேற்று முன் தினம் (12.05.2023) இரவு 23.30 மணி அளவில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (13.05.2023) காலை 08.30 மணி அளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 560 கிலோ மீட்டர் வடக்கு - வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து 14.05.2023 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை மிகத்தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
14.05.2023 முதல் 15.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.05.2023 மற்றும் 17.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
14.05.2023 முதல் 17.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
14.05.2023, 15.05.2023 மற்றும் 16.05.2023 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் – 38.2 டிகிரி செல்சியஸ், மதுரையில் – 38 டிகிரி செல்சியஸ், வேலூரில் – 36.8 டிகிரி செல்சியஸ், திருச்சியில் – 36.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் நுங்கம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.