திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் அடுத்த கீழ் பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் வயது (44) இவருக்கு பரிமளா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். வெற்றிவேலின் வீட்டிற்கு அவருடைய சகோதரர்கள் இருவரும் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள், வெற்றிவேல் சகோதரர் வீட்டிற்கு வருவது பரிமளாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் பரிமளாவிற்கு கணவர் வெற்றிவேலிற்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதன் பிறகு மீண்டும் வெற்றிவேலின் சகோதரர் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே தகராறு முற்றி கைகலப்பு வரையில் சென்றதாக கூறப்படுகிறது. உடனடியாக பரிமளா கோவத்துடன் சென்னை பூந்தமல்லியில் உள்ள சோகதரர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 9ம் தேதி பரிமளா திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் வெற்றிவேல் மீது புகார் அளித்துள்ளார். பின்னர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வெற்றிவேலை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
பிறகு 11-தேதி மீண்டும் வெற்றிவேலை மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவியாளர் பரமேஸ்வரி விசாரணை செய்ய வேண்டும் என மீண்டும் வெற்றிவேலை அழைத்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரித்து வெற்றிவேலை எழுத்துப்பூர்வமாக அறிக்கை எழுது வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி ரூபாய் 3000 லஞ்சம் கொடுக்கும்படி வெற்றிவேலிடம் கேட்டுள்ளார்.
வழக்கை ஒருதலைப் பட்சமாக விசாரணை செய்து எழுதி வாங்கியவுடன் மூன்றாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்து போன வெற்றி வேல் லஞ்ச கொடுக்க விருப்பம் இல்லாததால் இது பற்றி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகியுள்ளார்.லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சிறப்பு துணை ஆய்வாளர் பரமேஸ்வரியை பொறிவைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி இன்று ரசாயனம் தடவிய லஞ்சப்பணம் ரூபாய் 3 ஆயிரத்தை வெற்றி வேலிடம் கொடுத்து அனுப்பினார்.
இன்று திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேலையில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரிடம் வெற்றிவேல் லஞ்ச பணம் கொடுக்கும் பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர். கையும் களவுமாக பரமேஸ்வரியை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டப்ஞ்சாயத்து:
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ மற்றும் பெண்களின் குற்றச்சாட்டுகள் குறித்து வரும் புகார்களை காவல்நிலையத்தில் உள்ளவர்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் அடிக்கடி சென்று மகளிர் காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வந்தனர். காலப்போக்கில் அங்கு பணியில் இருக்கும் பெண் போலீசார் வைப்பது தான் சட்டம் என நிலைமை மாறியது. எனவே புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா எனவும், முறைகேடுகளை தவிர்க்கவும் உயரதிகாரிகள் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.