அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்தநாள், திமுக பிறந்த நாள் என மூன்று பெரும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவை திமுக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. 1974ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை திமுக கொண்டாடி வரும் நிலையில், அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலை ஒட்டி இந்த ஆண்டின் முப்பெரும் விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Continues below advertisement

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னின்று மேற்கொண்டார்.

எதிரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்

விழா தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  முப்பெரும் விழா ஒருங்கிணைப்பாளரும் கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

Continues below advertisement

’’திராவிட சூரியனான முதல்வரும் கழகத் தலைவருமான உங்களை (மு.க.ஸ்டாலின்) அன்புடன் வரவேற்கிறேன். உங்களின் வியூகம் என்னவென்று தெரியாமல், எதிரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். உங்களுக்கு என்னும் நன்றிக்கு உரியவனாகவும் நன்றி மாறாதவனாகவும் இருப்பேன்.

புன்னகையால் அரவணைக்கும் புன்னகையால் எதிரிகளை ஓட ஓட விரட்டும் இளைய சூரியனை (உதயநிதி) வரவேற்கிறோம். அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்!

2026 தேர்தல் வெற்றிக்கணக்கை இங்கிருந்தே தொடங்குவோம். எதிரிகள் யாராக இருந்தாலும் எந்த வடிவில் வந்தாலும் வெற்றி நமக்குத்தான்! நாம்தான் ஜெயிக்கிறோம், நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்! வெல்வோம் 200, படைப்போம் வரலாறு!’’

இவ்வாறு முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.