பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலையின் அண்ணா மேம்பாலத்தில் பெரியாரின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு புகழேந்தி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டியில்,
திடீரென ஒருவருக்கு தன்மானம் சுயமரியாதை பற்றி நினைவு வந்துள்ளது. அமித்ஷாவை பார்த்து விட்டு வெளியில் வந்த போது தன் முகத்தை மறைத்து வர வேண்டிய அவசியம் ஏன் ? டெல்லி சென்ற எடப்பாடி முக்காடு போட்டுக் கொண்டது ஏன் ?
அதிமுக அலுவலகத்தை நாங்கள் உடைத்தோம் என்று தொடர்ந்து கூறுகிறார் எடப்பாடி. அதிமுக அலுவலகத்தினுள் 15 நாட்கள் பெண்களை அழைத்து வந்து குடித்து விட்டு குத்தாட்டம் போட்டு வந்தனர். அதன் பின்னர் தான் அதை கண்டித்து விட்டு உள்ளே ஓ.பன்னீர் செல்வத்துடன் சென்றோம்.
கதவை உடைத்து உள்ளே சென்றோம்
அவர் தான் ஒருங்கிணைப்பாளர் அவர் உள்ளே சென்றதில் என்ன தவறு. அவருடைய அலுவலகத்தை பூட்ட யார் அவர்களுக்கு அதிகாகரம் கொடுத்தது. கதவை உடைத்து உள்ளே சென்றது உண்மை தான். ஆவணங்களை எடுத்தோம். பிறகு அதை தேவையில்லை என திருப்பி கொடுத்து விட்டோம்.
எடப்பாடி காலுக்கு அடியில் போட்டு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கொள்கையை புதைத்து விட்டார். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெ. என கூறிவிட்டு இப்போது தன்னை பொதுச் செயலாளர் என்று கூறிக் கொள்கிறார். நேற்று எடப்பாடி உண்மையை ஒத்துக் கொண்டு விட்டார். ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை தன்மானத்தை விட மாட்டோம் என்று கூறியுள்ளார்.
காவல்துறை விசாரணை போல அமித்ஷா நேற்று எடப்பாடியிடம் விசாரணை நடத்தியுள்ளார். எடப்பாடி கைகட்டி , அமித்ஷா காலில் விழுந்துள்ளார். காலம் தாழ்த்தாமல் ஓ. பன்னீர் செல்வம் , சசிகலா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் அது எடப்பாடிக்கு பலமாகி விடும்.
விஜய் ஓட்டு , வேட்டாக மாறப் போகிறது
விஜயின் தாக்கம் பயங்கரமாக உள்ளது. அது எதிர்க்கட்சிக்கும் அச்சத்தை தந்துள்ளது. நான் அதை மறைக்க விரும்பவில்லை.இபிஎஸ் - ன் பிரசாரத்திற்கு முதல்வர் அனைத்து அனுமதியும் தருகிறார். ஆனால் விஜயை அலைய விடுகின்றார். விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என சில பைத்தியக்காரர்கள் கேட்கின்றனர். விஜய் வாங்கும் ஓட்டு வேட்டாக மாறப் போகிறது.
எடப்பாடி தனது பதாகையில் பெரியார், அண்ணா படங்களை பயன்படுத்துவதில்லை. ஆனால் விஜய் திராவிட இயக்க தலைவர்களை விஜய் கொண்டாடுகிறார். அவர் அவர்களை கொண்டாடினால் நாங்கள் அவரை கொண்டாடுவோம்.
சீமானை விட குறைவாக வாக்கு வாங்கி 4 - வது இடத்துக்கு செல்வார் பழனிசாமி. சசிகலாவை இன்னமும் சந்திக்கவில்லை , ஆனால் சந்திக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.