செந்தில்பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்த இஎஸ்ஐ மருத்துவ குழுவிற்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று துர்கா ஸ்டாலினின் சகோதரர் மருத்துவர் ராஜாமூர்த்தி தெரிவித்துள்ளார். 


செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை


சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவமனையின் இறுதயவியல் துறையின் நான்கு மூத்த மருத்துவர்கள் கொண்ட குழுவானது செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவ குழு பரிந்துரை செய்திருந்தது.


இந்நிலையில், துர்கா ஸ்டாலினின் தம்பி ராஜாமூர்த்தி இஎஸ்ஐ இயக்குநர் என்பதால் செந்தில் பாலாஜியை காப்பாற்ற பார்க்கிறார் என்று அதிமுக, பாஜகவினர் சமுக வலைதளங்களில் கூறி வந்தனர்.   மேலும், யூடியூப்பில் துர்கா ஸ்டாலினின் சகோதரர் இஎஸ்ஐ இயக்குநர். வெளியானது அதிர்ச்சி உண்மை என்று வீடியோக்கள் வெளியானது.


துர்கா ஸ்டாலின் சகோதரர் பதில்


இந்நிலையில், செந்தில்பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்த இஎஸ்ஐ மருத்துவ குழுவிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று துர்கா ஸ்டாலினின் சகோதரும் மருத்துவருமான ராஜாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ”சென்னை கே.கே.நகரின் இஎஸ்ஐ, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே இதுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேபோல, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பியது நான்தான் என்று முடிந்தால் நிரூபியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.


இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து சென்ற மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக சொன்னதாகவும், அவர்கள் என் தலைமையில் உள்ள மருத்துவர்கள் என்றும் ஒரு கட்டுக்கதையை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அடிப்படை அறிவை இல்லாமல் என்மீது வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக யாரோ யூடியூப்பில் வீடியோ எடுத்து போட்டுள்ளனர். இந்த மாதிரியான பொய் செய்திகளை மக்கள் அதிகம் பார்க்கின்றனர்.  அதில், என்னை துர்கா ஸ்டாலினின் அண்ணண் என்று சொல்கிறார்கள். ஒரு அறிவே இல்லாமல் நான் துர்கா ஸ்டாலினின் அண்ணன் சொல்கிறார்கள். நான் அவரின் தம்பி” என்று தெரிவித்தார்.


”எனக்கு எந்த சம்பந்தமும்  இல்லை"


மேலும், அவர் பேசியதாவது, ”கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முழுமுழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பணியாற்றக் கூடிய டீன் வடமாநிலத்தவர். இவருடைய முழு கட்டுப்பாட்டில் தான் கே.கே.நகர் இஎஸ்ஐ செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து தான் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் செந்தில் பாலாஜியை சந்திக்க சென்றனர். ஓமந்தூரார் மருத்துவமனையும், இஎஸ்ஐ மருத்துவக் குழுவும் இதயத்தில் அடைப்பு இருப்பதாக உறுதி செய்து இருக்கிறார்கள். எனவே இதுக்கும் எனக்கும் சம்பந்தமும் இல்லை.


”சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பியது நான்தான் என்று முடிந்தால் நிரூபியுங்கள். அதுவும் நீ ஒருத்தவனுக்கு பிறந்தவனாங்க இருந்தால் இதை நிரூபித்து காட்டுங்கள். இதுபோன்று வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். இஎஸ்ஐ மருத்துவமனையில் என்னுடைய கட்டுப்பாட்டில் பணியாற்றக் கூடிய இறுதய சிகிச்சை மருத்துவர்கள் கிடையாது. ஆகவே ஒரு விஷயத்தை முழுமையாக தெரியாமல் பொய்யான செய்திகளை பரப்பக் வேண்டாம்” என்று துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜாமூர்த்தி தெரிவித்துள்ளார்.