Chennai Collector : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய ஆட்சியர்


திமுக அரசு சமீப காலமாகவே அதிரடியாக அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.  துறை ரீதியான விஷயங்களில் தீவிர நடவடிக்கை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் அதிக அளவு நடந்துள்ளது. 


அந்தவரிசையில், சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அச்சு மற்றும் எழுதுபொருள்  துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அருணா ஐ.ஏ.எஸ் சென்னை மாவட்ட ஆட்சியராக நியமித்து கடந்த 17ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று சென்னை மாவட்ட ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். 


ஆட்சியர் அறிவிப்பு


பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைபெற விண்ணப்பிக்க கால அவ காசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 


”2022-23ம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய  திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பதற்காக ஏதுவாக  கல்லூரிகளுக்கான https://tnadtwscholarship.tn.gov.in/என்ற இணையதளம் 30.1.2023ல் திறக்கப்பட்டு 31.5.2023 வரை கல்வி உத வித்தொகை விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.


தற்போது மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்காக கல்லூரிகளுக்கான https://tnadtwscholarship.tn.gov.in/என்ற இணையதளம் கடந்த 16ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் வருகிற 30ம் தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க 


தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக...அமித் ஷாவை தொடர்ந்து ஒருநாள் பயணமாக இன்று சென்னை வரும் ராஜ்நாத் சிங்


Senthil Balaji : ”நாளை அதிகாலை செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!