Senthil Balaji Case: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13-வது முறையாக நீட்டிக்கப்பட்ட காவல்:
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி கொடுப்பதாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, உடல்நலக் குறைவால் மருத்துவமனையைல் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் செந்தில் பாலாஜி. இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 5 மாத காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காணொலி காட்சி மூலமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜார்படுத்தபட்டார். இதனையடுத்து செந்தல் பாலாஜி நீதிமன்ற காவலை ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இன்று நீதிமன்ற காவல் நீட்டிப்பதன் மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13 ஆவது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
இதனிடையே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படியே, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நவம்பர் 28ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்து விட்டது. மருத்துவ அறிக்கையில் தீவிர பாதிப்பால் உடனடி சிகிச்சை தேவை என எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், மருத்துவ காரணங்களுக்காகச் செந்தில் பாலாஜி இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வருகிறார் செந்தில் பாலாஜி.
மேலும் படிக்க
Cyclone Relief Fund: வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாக கொடுக்க அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு..