தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளின் வானிலையை சென்னை வானிலை ஆய்வு மையம் கண்காணிக்கிறது. அந்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக புவியரசன் பொறுப்பு வகித்தார். 


இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக் கண்ணன் இதற்கு முன்பு காலநிலை மைய இயக்குநராக இருந்தவர். தற்போது அந்தப் பதவி புவியரசனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 


புவியரசன், கடந்த மாதம் சென்னையில் திடீரென மழை பெய்தபோது, வானிலையை சரியாக கணிக்க தவறிவிட்டோம் இருப்பதைக் கொண்டு இவ்வளவுதான் கணிக்க முடிந்தது என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இதுதொடர்பாக முதலமைச்சருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், புவியரசன் ஓய்வு பெறவில்லை. எப்போதும் நிகழக் கூடிய மாற்றம்தான் இது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக வானிலையை கணிக்க தவறியது குறித்து விளக்கமளித்த புவியரசன், “ வானிலை தகவல்கள் மற்றும் தரவுகள் திரட்டும்போது இரு முறைகளை கையாள்வோம். மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தம் ஆகியவற்றை கணிக்கும் போது அந்தமான் மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் உள்ள கருவிகளின் மூலம் தான் கணிக்கப்படும்.


கடலுக்குள் ஒரு காற்று சுழற்சி இருந்தால் அதை கணிக்க முடியாது. தரையை நெருங்கி வரும் போதுதான் கணிக்க முடியும். அந்த வகையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 31ஆம் தேதிதான் தரைப் பகுதிக்கு வரும். அதன்மூலம் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் காற்று சுழற்சி முன்கூட்டியே நகர்ந்து தரைப் பகுதிக்கு வந்துவிட்டது.


இதை கணிக்காமல் விட்டுவிட்டோம். சில சமயங்களில் இதுபோல வேகமாக நகர்வதுண்டு. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து இவ்வளவுதான் கணிக்க முடியும். காரைக்காலில் வானிலையை கணிக்க கூடுதல் கருவிகள் இல்லை. இன்னும் ஓரிரு இடங்களில் ரேடார்கள் பொருத்தினால் தான் முன்கூட்டியே கணிக்க முடியும். சில நேரங்களில் மேலே உள்ள காற்றின் ஓட்டம், நமது முன்னறிவிப்பையும் மாற்றிவிடும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலையில் பார்த்து மகிழுங்கள்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண