வாணியம்பாடி அடுத்த சின்ன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சஞ்சீவ் (18) .சென்னையில் ஒரு கேட்டரிங் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறார் . தற்போது கொரோனா முழு ஊரடகங்கினால் தனது சொந்த கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார்  .



இன்று மதியம் தனது வீட்டருகே வயலில் டிராக்டர் உழுது கொண்டிருப்பதை  வேடிக்கை  பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.  அப்போது  டிராக்டர் ஓட்டுநர் உணவு இடைவேளைக்காக நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே டிராக்டரை நிறுத்திவிட்டு உணவருந்தச் சென்றுள்ளார். செல்ஃபி எடுப்பதன் மீது அதிக ஆர்வம் கொண்ட சஞ்சய் டிராக்டரில் ஏறி அமர்ந்து தொடர்ச்சியாக செல்பி எடுத்துள்ளார். டிராக்டர் ஓட்டுநர் அதன் சாவியை ட்ராக்டரில் வைத்துவிட்டு சென்றுவிட்டதால்  ஆர்வமிகுதியால் டிராக்டரை ஓட்ட தெரியாமல் ஸ்டார்ட் செய்து இயக்கியுள்ளார் .


இதில் டிராக்டர் நிலைதடுமாறி அருகிலிருந்த  120 அடி ஆழ கிணற்றில்  சஞ்சீவுடன் கிணற்றில் விழுந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சஞ்சீவை மீட்கும் முயற்சியாக  வாணியம்பாடி தீ அணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு  தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலான, அம்பலூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர்  விரைந்துவந்து  சஞ்சீவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிணற்றில் 35 அடி ஆழத்திற்கு மேல்  தண்ணீர் இருந்ததாலும், மேலும் டிராக்டரில் இருந்து  கசிந்த  டீசல் மற்றும் ஆயில்  கிணற்று  நீரில்  கலந்துவிட்டதால்  உள்ளே இறங்கி மீட்பு பணியில் ஈடுபட முடியாமல்  திணறினர் .


 



 பின்னர்  தண்ணீரை வெளியேற்றி சஞ்சீவின் உடலை சுமார்  5  மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலான அம்பலூர் காவல்துறையினர் சஞ்சீவின் உடலை வாணியம்பாடி அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்ப ஆயத்தங்கள் செய்துகொண்டு இருக்கும் போது  பிரேத  பரிசோதனைக்கு அனுப்பாமல் சடலத்தை ஒப்படைக்கக் கோரி இளைஞரின் உறவினர்கள் காவல்துறையினருடன்  வாக்குவாதத்தில்  ஈடுபட்டு ஆம்புலன்ஸை  போகவிடாமல்  தடுத்தனர் .



இதனால்  சில மணிநேரம்  அங்கு  பரபரப்பு  ஏற்பட்டது  பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுற்கு ஒரே பிள்ளையான சஞ்சீவ்  செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் டிராக்டர் உடன் கிணற்றில் விழுந்து  உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார குதியில் பெறும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.