வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து வீரவணக்க முழக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. நாகை மாவட்டம் கீழ வெண்மணியில் கூலி உயர்வுக்காக 44 விவசாயக் கூலித் தொழிலாளர்களை ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தில் ஏராளமானோர் நினைவஞ்சலி செலுத்தினர் அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வந்தபோது சீமான் உட்பட15 நபர்கள் மட்டும் அங்கு அனுமதித்தனர்.



 


தமிழக மீனவர்களை கண்டித்து யாழ்பாண மீனவர்கள் போராட்டம் - தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதாக புகார்


அப்போது சீமான் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தியாகிகளுக்கு வீரவணக்க முழக்கங்களை எழுப்பிய போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது என அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி கூச்சலிட்டனர்.இதனால் சற்று நேரம் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது இதனை தொடர்ந்து காவல்துறையினர் சீமானை பாதுகாப்புடன் அழைத்து வந்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்.





 

அரைப்படி நெல் கூடுதலாக கூலி கேட்டு பொதுமக்கள், உழைக்கும் மக்கள் பலியான இடம் இது. உயிர் இழந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு தமிழர்களாகிய அனைத்து தரப்பினருக்கும் கடமை இருக்கிறது. இப்படி இருக்க இங்கே, ஒரே ஒரு கட்சி கொடி மட்டும்தான் பறக்க வேண்டும். வேறு எந்த கொடியும் பறக்க கூடாது என நினைத்து, எங்களை புறக்கணிக்கிறார்கள். இது எப்படி கம்யூனிசம் ஆகும். இதில் போய் ஏன் அவர்கள் இடையூறு செய்ய வேண்டும். கொடிகளை எடுத்து வரக் கூடாது என்கிறார்கள்.

 



 

அவர்கள் சத்தமாக பாடுகிறார்கள், நாங்கள் வணக்கம்  செலுத்தக் கூடாது என்கிறார்கள். இதற்கு தான் நாங்கள் வருவதே இல்லை. எங்களுடைய அலுவலகத்திலேயே அஞ்சலி செலுத்தி இருக்கலாம் என்று  வேதனையுடன் கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் பாதுகாப்புடன் சீமான் வழி அனுப்பப்பட்டார்.