அவர் மீது அரசின் நடவடிக்கைகள் தொடரும். யார் நடமாட முடியாது என கொக்கரித்தார்களோ அவர்கள்தான் இன்று ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். தவறு செய்த காரணத்தினால்தான், ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார். அவர் மீது நிச்சயம் நடவடிக்கை தொடரும். மேலும், 2 லட்சத்து 30 ஆயிரம் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி பட்டாசு வழங்கியதில் மோசடி செய்துள்ளார். ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளார். கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என்று கடுமையாக விமர்சித்தார்.
கடந்த காலங்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக எப்படி வெற்றி பெற்றோமோ அதைவிட கூடுதலாக இம்முறை நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதிபட கூறினார். மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய 5 வருட கால திட்டங்களை, 5 மாத காலத்திலேயே முடித்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் பெருமையுடன் அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு பொங்கல் விற்பனைக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் நெய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு தொகுப்பு 21 பொருட்களில் 100 கிராம் நெய் இடம் பெறும் என்றும் கூறினார்.