தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மார்ச் 4ம் தேதியான சனிக்கிழமை நாளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் , தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மார்ச் மாதம் 4-ம் தேதி திங்கள்கிழமை அட்டவணையை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் எனவும், இந்த நாளை ஈடு செய்ய மார்ச் 13-ஆம் தேதி திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.