குளித்தலை அருகே மேல தாளியாம்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வீட்டு வளர்ப்பு பிராணிகளான நாய் பூனை ஆகியவற்றிற்கு வெறி நோய் தடுப்பூசியும், கால்நடைகளான ஆடு, மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு தடுப்பூசி, அம்மை நோய், கோமாரி நோய், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு மருந்தும் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
மேலும் ஆடு மாடுகளுக்கு சினை ஊசியும் சினை பரிசோதனைக்கு பின்னர் செலுத்தப்பட்டது. இதில் கருப்பு ஊராட்சி மற்றும் மேல தாளியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. மேலும் பல சிறந்த கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்