சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கியது முக்கியத்துவம் வாய்ந்தது என காந்தியின் பேரனும், முன்னாள் மேற்கு வங்க மாநில ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இனி சலவை இயந்திரங்களின் பயன்பாடு, மாநிலங்களில் உள்ள அனைத்து சீர்திருத்த இல்லங்களிலும் இடம் பெறும் என நம்புகிறேன் என கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்